» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சீனாவில் இரு சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 12 பேர் பலி : 125 பேர் படுகாயம் - கட்டிடங்கள் சேதம்!!

செவ்வாய் 18, ஜூன் 2019 11:41:43 AM (IST)



சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 12 பேர் உயிரிழந்தனர், 125 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சீனாவின் தென்மேற்கு பகுதியில் சிச்சுவான் மாகாணம் அமைந்துள்ளது. இம்மாகாணத்தில் உள்ள இபின் நகரத்தில் நேற்று இரவு 10.55 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது. இதனால் பீதியடைந்த மக்கள் சாலையில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டிடங்கள் சேதமடைந்தன. இதே பகுதியில் இன்று காலை மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டரில் 5.3 ஆக பதிவானது. அடுத்தடுத்து ஏற்பட்ட இரு சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், 12 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும் 125 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீட்புப்பணியில் 300 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மக்கள் தங்குவதற்காக தற்காலிகமாக ஐந்தாயிரம் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.    கடந்த 2008-ம் ஆண்டு சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 70 ஆயிரம் பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory