» செய்திகள் - விளையாட்டு » உலகம்

விமானத் தாக்குதலையும், உலகக் கோப்பையையும் ஒப்பிடாதீர்கள்: அமித் ஷாவுக்கு பாக்.அறிவுரை

செவ்வாய் 18, ஜூன் 2019 3:57:31 PM (IST)

விமானத் தாக்குதலையும், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியையும் ஒப்பிட வேண்டாம் என்று இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் அறிவுரை வழங்கியுள்ளார்.

பாகிஸ்தான் மீதான மற்றொரு அதிரடி தாக்குதல் என்று கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை இந்தியா வென்றது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்திய கிரிக்கெட் அணிக்கு பாராட்டுத் தெரிவித்திருந்தார். இது குறித்து பாகிஸ்தான் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர் பேசுகையில், அன்புள்ள அமித் ஷா அவர்களுக்கு, ஆமாம், போட்டியில் உங்கள் அணி வென்றுள்ளது. நன்றாகவே விளையாடினார்கள்.

ஆனால், விமானத் தாக்குதலும், கிரிக்கெட் போட்டியும் வெவ்வேறானவை. இவ்விரண்டு விஷயங்களையும் எப்போதும் ஒப்பிடக் கூடாது.  ஒருவேளை அதில் சந்தேகம் இருந்தால், எங்களது நௌஷ்ரா பதில் தாக்கதலில் இரண்டு இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதை நினைவு கூருங்கள். ஆச்சரியத்துக்காக காத்திருங்கள் என்று தனது சொந்த டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory