» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியாவுக்கு மீண்டும் வரியில்லாத ஏற்றுமதி சலுகை: அமெரிக்க எதிர்க்கட்சி எம்பி வலியுறுத்தல்!!

புதன் 19, ஜூன் 2019 5:20:07 PM (IST)

இந்தியாவுக்கு வரியற்ற வர்த்தக சலுகையை மீண்டும் வழங்கும்படி அமெரிக்க வர்த்தக பிரதிநிதியான ராபர்ட் லித்திசைசரிடம் அமெரிக்காவின் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி செனட்டர் ராபர்ட் மெனென்டெஸ் வலியுறுத்தினார்.

செனட் கமிட்டியில் நடந்த விசாரணையில் கலந்து கொண்ட ராபர்ட் மெனென்டெஸ் பேசுகையில் ‘‘இந்தியாவுடனான நமது பிரச்சனைக்கு நிச்சயம் தீர்வு காண முடியும் என நம்புகிறேன். அதனால் அவர்களுக்கு வரியற்ற வர்த்தக சலுகையை அமெரிக்கா மீண்டும் வழங்க வேண்டும்’’ என்று ராபர்ட் மெனென்டெஸ் கூறினார். அதேசமயம் இந்தியாவுடனான வர்த்தக பிரச்சனைகள் குறித்து அதிபர் டிரம்பின் கருத்துகளுக்கு ராபர்ட் மெனென்டெஸ் ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசினார்.

ராபர்ட் மெனென்டெஸின் வேண்டுகோளுக்கு ராபர்ட் லித்திசைசர் நேரடியாக பதிலளிக்கவில்லை. ஆனால் தான் பேசும் போது ஜிஎஸ்பி சலுகையை தகுதியான நாடுகளுக்கு வழங்குவது தொடர்பாக அமெரிக்க அரசு ஆய்வு நடத்தி வருகிறது. இது குறித்து பல நாடுகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அமெரிக்காவின் முந்தைய அரசுகளால் நடைமுறைப்படுத்தப்பட்ட சில தவறனான வர்த்தக கொள்கைகளால் இன்று உலக நாடுகளுடனான அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை அதிகரித்துள்ளது. அமெரிக்க விவசாயிகள், பண்ணையாட்கள், தொழிலாளர்கள் மற்றும் வணிகர்களுக்கு அநீதியான வர்த்தக விதிமுறைகளை மாற்றுவதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம் என்று ராபர்ட் லித்திசைசர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory