» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது: 9 பேர் உயிரிழப்பு

ஞாயிறு 23, ஜூன் 2019 7:48:04 PM (IST)

அமெரிக்காவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மத்திய பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமெரிக்காவின் ஹவாய் மாநிலம் அமைந்துள்ளது. இந்நிலையில் ஓவாஹுவின் தலைநகரான ஹோனோலுலுவில் உள்ள டில்லிங்ஹாம் விமானத்தளம் அருகே பறந்துக் கொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான விமானம் ஒன்று திடீரென்று கீழே விழுந்து நொறுங்கியது. இதில் விமானம் தீப்பற்றி எரிந்து சாம்பலானது. இந்த விபத்தில் 9 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். அந்த விமானத்தில் இருந்த அனைவரும் ஸ்கை டைவிங் சாகசத்தில் ஈடுபடும் முயற்சியில் சென்றதாக தெரிகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory