» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சென்னையை மழையால் மட்டுமே காப்பாற்ற முடியும்: டைட்டானிக் ஹீரோ கருத்து

புதன் 26, ஜூன் 2019 5:41:29 PM (IST)சென்னையை மழையால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்று தண்ணீர்ப் பிரச்னை குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் லியனார்டோ டி காப்ரியோ கருத்து தெரிவித்துள்ளார். 

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் நிலைகளாக பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம், புழல் ஆகிய ஏரிகள் திகழ்கின்றன. கடந்தாண்டு போதிய பருவ மழை இல்லாததால் மேற்கண்ட ஏரிகள் தற்போது முற்றிலும் வறண்டு போயுள்ளன. இதனால், சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிசிசி-யில் வெளியான செய்தியை வைத்து லியானார்டோ டி காப்ரியோ, தன்னுடைய இன்ஸ்டகிராம் பதிவில் கூறியுள்ளதாவது: 

இந்நிலைமையில் இருந்து சென்னையை மழையால் மட்டுமே காப்பாற்ற முடியும். (புகைப்படத்தில் உள்ள) கிணறு முற்றிலும் வறண்டு உள்ளது. நகரம் தண்ணீரில்லாமல் உள்ளது. நான்கு ஏரிகள் வறண்டு போன பிறகு, இந்திய நாட்டின் தென்னிந்திய நகரமான சென்னை சிக்கலில் உள்ளது. குடிநீருக்காக மக்கள் காலிக் குடங்களுடன் அரசு தரும் தண்ணீருக்காக வரிசையில் பல மணி நேரம் காத்திருக்கிறார்கள். தண்ணீர்ப் பிரச்னை காரணமாக ஹோட்டல்கள் மூடப்படுகின்றன. இந்தப் பிரச்னையை சரிசெய்ய அரசு அதிகாரிகள் யோசித்து வருகிறார்கள். ஆனால் சென்னை மக்கள் மழைக்காகத் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகிறார்கள் என்று தனது எண்ணங்களைப் பதிவு செய்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory