» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பருவநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகள்: அமெரிக்கா தவிர்த்து 19 நாடுகள் உறுதி

சனி 29, ஜூன் 2019 4:23:15 PM (IST)



பருவநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்த அமெரிக்காவை தவிர ஜி-20 அமைப்பில் இடம்பெற்றுள்ள 19 நாடுகள் உறுதியேற்றன.

குளோபல் வார்மிங் என்றழைக்கப்படும் புவி வெப்பமயமாதல் பிரச்சனைக்கு காரணமான பசுமை குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த, அமெரிக்கா மற்றும் 187 நாடுகள் செய்துகொண்ட ஒப்பந்தம், பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் ஆகும். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா காலத்தில் ஏற்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் இருந்து சமீபத்தில் அமெரிக்கா விலகியது. 

இதற்கான அறிவிப்பை தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிட்டார். இந்நிலையில், ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டின் நிறைவு நாளான இன்று பருவநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து தீவிரமாக செயல்படுத்துவது என அமெரிக்காவை தவிர ஜி20 அமைப்பில் இடம்பெற்றுள்ள 19 நாடுகளின் தலைவர்களும் உறுதியேற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory