» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கம் சரி செய்யப்பட்டது: ஃபேஸ்புக் நிறுவனம் அறிவிப்பு!!

வியாழன் 4, ஜூலை 2019 10:59:28 AM (IST)

உலகம் முழுவதும் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் முடங்கியதால் நெட்டிசன்களைப் பரிதவிக்க வைத்த பிரச்சினை இன்று அதிகாலை சரி செய்யப்பட்டது.

பெரும்பாலான மக்களின் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக மாறிப்போயுள்ளது ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள். காலை எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை 10 நிமிடங்களுக்கு ஒருமுறை இவற்றைத் திறந்து நிலைத்தகவல்கள், புகைப்படங்கள் பதிவேற்றம் செய்து, மற்றவர்களின் பதிவுகளைப் படிக்கவில்லையென்றால் சிலருக்குத் தூக்கம் வராது.பல தொழில்கள் கூட சமூக வலைதளங்களை நம்பியிருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கின்றன. இதனால் இவற்றில் ஒரு சிறிய பிரச்சினை என்றாலும் கூட அது இணையத்தில் உலகளாவிய அளவில் ட்ரெண்டாவது வாடிக்கையாகிவிட்டது.

அந்த வகையில் ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகிய மூன்று சமூக வலைதளங்களிலும் புகைப்படங்கள், வீடியோக்கள் பதிவிறக்கம் செய்வதில் நேற்று பிரச்சினை ஏற்பட்டது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலிருந்தும் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு புகார்கள் குவியத் தொடங்கின. நேற்று (03.07.19) காலை முதலே நெட்டிசன்கள் இந்தப் பிரச்சினை குறித்து புலம்பித் தள்ளினர். சமூக வலைதளங்களில் ஏற்பட்ட இந்த சிக்கல் ட்விட்டரில் #facebookdown #instagramdown #whatsappdown என்ற ஹேஷ்டேக் மூலம் உலக அளவில் ட்ரெண்டானது.

பின்னர் உலகம் முழுவதும் நெட்டிசன்களைப் பரிதவிக்க வைத்த இந்தப் பிரச்சினை இன்று அதிகாலை சரி செய்யப்பட்டது. இதை  ஃபேஸ்புக் நிறுவனம் இன்று (04.07.19) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது. இது குறித்து ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், "முன்னதாக இன்று சில மக்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் எங்களுடைய சமூக வலைதளங்களில் படங்கள், வீடியோக்கள் பதிவேற்றம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்தப் பிரச்சினை சரிசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும் 100% அனைவருக்கும் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும். சிரமத்துக்கு மன்னிக்கவும்’ என்று கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory