» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சோமாலியா ஓட்டலில் பயங்கரவாதிகள் தாக்குதல் : வெளிநாட்டினர் உட்பட 26 பேர் பலி

சனி 13, ஜூலை 2019 5:54:31 PM (IST)

சோமாலியா ஓட்டலில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்கா, பிரிட்டனைச் சேர்ந்த வெளிநாட்டினர் உட்பட 26 பேர் பலியாகினர்.

சோமாலியா நாட்டின் கிஸ்மேயோ என்ற துறைமுக நகரில் மெடினோ என்ற ஓட்டல் அமைந்துள்ளது.  இந்த ஓட்டலுக்கு அரசியல் கட்சியினர் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.  இந்நிலையில், துப்பாக்கிகளுடன் வந்த தீவிரவாதிகள் சிலர் கார் வெடிகுண்டு ஒன்றை முதலில் வெடிக்க செய்து தாக்குதலில் ஈடுபட்டனர்.  இதன்பின் ஓட்டலுக்குள் புகுந்தனர். அவர்களை பாதுகாப்பு படையினர் தடுத்து பதிலடி கொடுத்தனர்.  

இதனை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.  இந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில், கென்யா நாட்டைச்சேர்ந்த 3 பேர், தான்சானியா நாட்டைச் சேர்ந்த 3 பேர்,  2 அமெரிக்கா, மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர். இந்த தாக்குதலுக்கு சோமாலியா நாட்டின் அல் ஷபாப் என்ற கிளர்ச்சியாளர்கள் அமைப்பு பொறுப்பேற்று கொண்டது.    என்று சோமாலியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory