» செய்திகள் - விளையாட்டு » உலகம்

புதிய தலாய்லாமாவை நாங்களே முடிவு செய்வோம், இந்தியா தலையிடக்கூடாது: சீனா

திங்கள் 15, ஜூலை 2019 10:35:01 AM (IST)

புதிய தலாய்லாமாவை நாங்களே முடிவு செய்வோம், இந்தியா தலையிடக்கூடாது என்று சீனா தெரிவித்துள்ளது.

திபெத்திய புத்த மத தலைவராக தலாய் லாமா உள்ளார். இவர் 14 ஆவது புத்த மத தலைவராவார். வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக, 15 ஆவது புத்த மத தலைவரை அம்மதத்தினர் தேர்ந்தெடுக்க உள்ளனர். இந்த நிலையில் அடுத்த தலாய் லாமா யார் என்பதை சீனாதான் முடிவு செய்யும், இதில் இந்தியா தலையிட்டால் அது இரு தரப்பு உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சீனா சூசகமாக தெரிவித்துள்ளது.

திபெத் துணைவர் அந்தஸ்து வகிக்கிற சீன அதிகாரி வாங் நேங் ஷெங்  இது பற்றி கூறும் போது, ‘‘தலாய் லாமா நியமன விவகாரம், வரலாறு, மதம் மற்றும் அரசியல் ரீதியிலானது. அதற்கான வரலாற்று அமைப்புகள் உள்ளன. நடைமுறைகளும் உள்ளன. தலாய் லாமா யார் என்பதை எந்த தனிப்பட்ட நபரோ அல்லது வெளிநாடுகளில் உள்ள மக்களோ தீர்மானிக்க முடியாது’’ என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory