» செய்திகள் - விளையாட்டு » உலகம்
குல்பூஷண் ஜாதவை, இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி: பாகிஸ்தான் அறிவிப்பு
வெள்ளி 19, ஜூலை 2019 12:45:25 PM (IST)
குல்பூஷண் ஜாதவை, இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி அளிக்கப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

16 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 15 நீதிபதிகள் இந்த தீர்ப்பை ஒரு மனதாக ஏற்றுக் கொண்டனர், பாகிஸ்தான் நீதிபதி மட்டுமே மாறுபட்ட தீர்ப்பு வழங்கினார். எனவே பெரும்பான்மை தீர்ப்பு நடைமுறைக்கு வரும். குல்பூஷண் ஜாதவை, இந்திய தூதரக அதிகாரிகள் அணுகவும் தொடர்புகொள்ளவு, அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்நிலையில், வியன்னா ஒப்பந்தப்படி இந்திய தூதரக அதிகாரிகள் குல்பூஷண் ஜாதவைச் சந்திக்க அனுமதிப்பது தொடர்பான உரிமைகள், குல்பூஷண் ஜாதவுக்கு தெரிவிக்கப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வியாழன் இரவு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் சட்டங்களின்படி, குல்பூஷண் ஜாதவை தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி வழங்கப்படும் என்றும், அதற்கான நடைமுறைகளை வகுத்து வருவதாகவும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பரில், குல்பூஷண் ஜாதவை அவரது மனைவியும் தாயாரும் கடும் கட்டுப்பாடுகளுடன் சந்திக்க பாகிஸ்தான் அரசு அனுமதித்தது. அதன் பிறகு குல்பூஷண் ஜாதவின் நிலை குறித்து வெளியுலகிற்கு ஏதும் தெரியாது. சர்வதே நீதிமன்றத்தின் நேற்றைய தீர்ப்புக்கு பிறகு, ஜாதவை சந்திக்க இந்திய தூதரக அதிகாரிகள் அனுமதிக்கப்படுவர் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஹோட்டல்களில் பெண்களுக்கு தனி நுழைவாயில் தேவையில்லை: சவுதி அரசு அறிவிப்பு
செவ்வாய் 10, டிசம்பர் 2019 12:48:58 PM (IST)

உலகின் இளம் பிரதமரானார் பின்லாந்து பெண் அமைச்சர் சன்னா மரின்!!
செவ்வாய் 10, டிசம்பர் 2019 12:25:41 PM (IST)

மிஸ் யுனிவர்சாக தென் ஆப்பிரிக்க அழகி தேர்வு
திங்கள் 9, டிசம்பர் 2019 4:32:55 PM (IST)

அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை : அணு ஆயுத சோதனை நடத்திய வடகொரியா!!
திங்கள் 9, டிசம்பர் 2019 3:28:15 PM (IST)

காஷ்மீரில் மனித உரிமைக்கு பாதுகாப்பு இல்லை இந்திய வம்சாவளி பெண் எம்.பி. தீர்மானம் தாக்கல்
ஞாயிறு 8, டிசம்பர் 2019 5:48:28 PM (IST)

நிதி நெருக்கடியில் தத்தளிக்கும் பாகிஸ்தானுக்கு 9,360 கோடி அவசர கடன்: ஆசிய வளர்ச்சி வங்கி அறிவிப்பு!
சனி 7, டிசம்பர் 2019 12:30:50 PM (IST)
