» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியா விதித்த கட்டுப்பாடுகளால் ரூ.350 கோடி இழப்பு: பாகிஸ்தான் விமான போக்குவரத்து துறை அமைச்சர்

சனி 20, ஜூலை 2019 12:48:59 PM (IST)

இந்தியா விதித்த கட்டுப்பாடுகளால் பாகிஸ்தானுக்கு சுமார் ரூ.350 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் சிவில் விமான போக்குவரத்து துறைஅமைச்சர் குலாம் சர்வார் கான் தெரிவித்தார்.

காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் பிப்ரவரி மாதம் 14-ந் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானுக்கு சென்று, பாலக்கோட்டில் இருந்த பயங்கரவாதிகளின் முகாம்களை குண்டு போட்டு அழித்து பதிலடி கொடுத்தன. இந்த தாக்குதலால் அதிர்ந்து போன பாகிஸ்தான், தன் வான்வெளியை மூடியது. 4½ மாத இடைவெளிக்கு பின்னர் கடந்த 16-ந் தேதி அதிகாலை திறந்தது.

இந்த காலகட்டத்தில் மேற்கத்திய நாடுகளுக்கு இந்திய விமானங்கள் சுற்றிச்செல்ல நேரிட்டது. இதனால் ஏர் இந்தியாவுக்கு ரூ.491 கோடி இழப்பு ஏற்பட்டது. அதே நேரத்தில் இந்தியா விதித்த கட்டுப்பாடுகளால் பாகிஸ்தானுக்கு 50 மில்லியன் டாலர் (சுமார் ரூ.350 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை அந்த நாட்டின் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் குலாம் சர்வார் கான் தெரிவித்தார். மேலும், "இது தங்கள் நாட்டு சிவில் விமான போக்குவரத்து துறைக்கு மிகப்பெரிய இழப்பு; இதுபோன்ற தருணங்களை தடுத்து இணக்கமாக நடந்து கொள்வது இரு நாடுகளுக்கும் அவசியம்” என்றும் அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory