» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தியர்கள் உள்பட 23பேருடன் சென்ற இங்கிலாந்து கப்பலை ஈரான் சிறை பிடித்ததால் பதற்றம்
சனி 20, ஜூலை 2019 12:55:26 PM (IST)

இந்தியர்கள் உள்பட 23 ஊழியர்களுடன் இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான் சிறை பிடித்துள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நீடிக்கிறது.
அணு ஆயுத பரவல் ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் பிரச்சினை இருந்து வருகிறது. அதை தொடர்ந்து ஈரானுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கும் பொருளாதார தடை விதிக்கப்படும் என அச்சுறுத்தியுள்ளது. இந்நிலையில் சிரியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற ஈரான் கப்பலை கிப்ரால்டார் என்ற இடத்தில் இங்கிலாந்து கடற்படை பறிமுதல் செய்தது. சிரியாவுக்கு கச்சா எண்ணெய் கடத்தி சென்றதாக குற்றம் சாட்டியது.
இதனால் ஆத்திரம் அடைந்த ஈரான் பதிலடி கொடுக்கும் வகையில் இங்கிலாந்து எண்ணெய் கப்பலை சிறை பிடிக்க போவதாக எச்சரிக்கை விடுத்து இருந்தது. இந்நிலையில் நேற்று பாரசீக வளைகுடாவில் ஹோர்முஷ் ஜலசந்தி பகுதியில் சென்று கொண்டிருந்த இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான் கடற்படை சிறை பிடித்தது. ஈரான் கடல் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்ததாகவும், ஈரான் புரட்சிகர படையினரின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் தவறான வழியில் சென்றதால் சிறை பிடித்ததாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. ஆனால் இதை இங்கிலாந்தின் எண்ணெய் கப்பல் நிர்வாகம் மறுத்துள்ளது. சர்வதேச சட்ட திட்டங்களுக்குட்பட்டு பயணம் மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது.
ஸ்டெனா இம்பீரியோ எனப்படும் இங்கிலாந்து எண்ணெய் கப்பல் சவுதிஅரேபியா துறைமுகத்துக்கு சென்று கொண்டிருந்த போது சிறை பிடிக்கப்பட்டது. அதில் 23 ஊழியர்கள் இருந்தனர். அவர்கள் இந்தியா, ரஷியா, வாத்வியா, மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளை சேர்ந்தவர்கள்.கப்பல் சிறை பிடிக்கப்பட்ட போது நடந்த தாக்குதலில் ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரசீக வளைகுடாவில் ஹோர்முஷ் ஜலசந்தியில் ஈரானின் ஆளில்லா விமானத்தை அமெரிக்க கடற்படை சுட்டு வீழ்த்தியது. அதனால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது.இந்த நிலையில் இங்கு இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான் சிறை பிடித்துள்ளது. இதனால் அப்பகுதியில் பதட்டம் தொடர்ந்து நீடிக்கிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஹோட்டல்களில் பெண்களுக்கு தனி நுழைவாயில் தேவையில்லை: சவுதி அரசு அறிவிப்பு
செவ்வாய் 10, டிசம்பர் 2019 12:48:58 PM (IST)

உலகின் இளம் பிரதமரானார் பின்லாந்து பெண் அமைச்சர் சன்னா மரின்!!
செவ்வாய் 10, டிசம்பர் 2019 12:25:41 PM (IST)

மிஸ் யுனிவர்சாக தென் ஆப்பிரிக்க அழகி தேர்வு
திங்கள் 9, டிசம்பர் 2019 4:32:55 PM (IST)

அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை : அணு ஆயுத சோதனை நடத்திய வடகொரியா!!
திங்கள் 9, டிசம்பர் 2019 3:28:15 PM (IST)

காஷ்மீரில் மனித உரிமைக்கு பாதுகாப்பு இல்லை இந்திய வம்சாவளி பெண் எம்.பி. தீர்மானம் தாக்கல்
ஞாயிறு 8, டிசம்பர் 2019 5:48:28 PM (IST)

நிதி நெருக்கடியில் தத்தளிக்கும் பாகிஸ்தானுக்கு 9,360 கோடி அவசர கடன்: ஆசிய வளர்ச்சி வங்கி அறிவிப்பு!
சனி 7, டிசம்பர் 2019 12:30:50 PM (IST)

இவன்Jul 20, 2019 - 01:18:54 PM | Posted IP 173.2*****