» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் பொறுமை காக்க ஐநா பொது செயலாளர் வலியுறுத்தல்

திங்கள் 5, ஆகஸ்ட் 2019 10:22:44 PM (IST)

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இருதரப்பும் பொறுமை காக்க வேண்டும் என்று ஐநா பொதுசெயலாளர் ஆண்டோனி கட்டாரெஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக இன்று காலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள், ஜம்மு காஷ்மீர் பிராந்திய கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்திய அரசின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது. சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் இந்தியா மீண்டும் காஷ்மீர் பிரச்சனைக்கு உயிர் கொடுத்துள்ளது என பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது குறித்து ஐநா பொதுசெயலாளர் ஆண்டோனி கட்டாரெஸ் கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து ஐநா பொது செயலாளர் ஆண்டோனி கட்டாரெஸின் செய்தி தொடர்பாளர் ஸ்டெபானி துஜாரிக் வெளியிட்ட அறிக்கையில், ‘‘இந்தியா – பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாடு கோடு அருகே கடந்த சில நாட்களாக ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஐநா ராணுவ பார்வையாளர் குழு (UN Military Observer Group in India and Pakistan) தெரிவித்துள்ளது’’

‘‘எனவே நிலைமை மேலும் மோசமாவதை தடுக்க இருதரப்பினரும் பொறுமை காக்க வேண்டும் என்று ஐநா வலியுறுத்துகிறது’’ என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையே நடக்கும் போர் ஒப்பந்த மீறல்கள், போர் பதற்றம் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் ஆகியவற்றை குறித்து கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய ஐநா ராணுவ பார்வையாளர் குழு கடந்த 1949ம் ஆண்டு நிறுவப்பட்டது. ஆனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே 1972ம் ஆண்டு சிம்லா ஒப்பந்தம் கையெழுத்தான பின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஐநா ராணுவ பார்வையாளர் குழு தன் அத்தியாவசியத்தை இழந்துவிட்டதாக இந்தியா தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory