» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தியாவில் தஞ்சம் அடைய முயற்சி : மாலத்தீவு முன்னாள் துணை அதிபருக்கு 15 நாள் சிறை!!
செவ்வாய் 6, ஆகஸ்ட் 2019 5:23:21 PM (IST)
இந்திய அரசால் திருப்பி அனுப்பப்பட்ட மாலத்தீவு நாட்டின் முன்னாள் துணை அதிபர் அகமது அதீபை 15 நாள் சிறையில் அடைத்து வைக்குமாறு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், மாலத்தீவில் இருந்து கடந்த மாதம் 27-ந்தேதி ஒரு இழுவை கப்பல் தூத்துக்குடிக்கு வந்தது. இதில் மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது ஆதீப் ரகசியமாக இந்தியாவுக்கு வந்தார். அவர் வரும் விவரம் பற்றி அந்த கப்பலில் தூத்துக்குடி கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த இழுவை கப்பல் தூத்துக்குடி கடல் பகுதியில் வந்தபோது, கடலோர காவல்படையினர் அந்த இழுவை கப்பலை வழிமறித்தனர். அதில் இருந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது ஆதீபிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில், அந்த இழுவை கப்பலை அங்கிருந்து செல்லாமல் நிறுத்தி வைக்குமாறும், கப்பலில் இருந்து அகமது ஆதீப்பை கீழே இறக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதனால் அகமது ஆதீப் தொடர்ந்து இழுவை கப்பலிலேயே பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு இருந்தார். உளவுப்பிரிவு போலீசாரும் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் நீண்ட விசாரணைக்கு பிறகு மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது ஆதீப் திருப்பி அனுப்பப்பட்டார். அவரை இந்திய கடற்படையினர் சர்வதேச கடல் எல்லையில் மாலத்தீவு கடற்படையிடம் ஓப்படைத்தனர்.
பின்னர், மாலத்தீவு தலைநகர் மாலேவுக்கு கொண்டு செல்லப்பட்ட அகமது ஆதிப்-ஐ போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சர்வதேச கடல் எல்லையில் அவரை கைது செய்வதில் போலீசார் உரிய நடைமுறைகளை கடைபிடிக்காதது தொடர்பாக கண்டனம் தெரிவித்த நீதிமன்றம் அகமது ஆதிப்-ஐ விடுதலை செய்து உத்தரவிட்டது. பின்னர், போலீசார் முறையான கைது உத்தரவை பெற்று அவரை மீண்டும் கைது செய்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையில், இந்தியாவில் அரசியல் தஞ்சம் அடைவதற்கு அகமதி அதீப் முறைப்படி முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பேட்டி அளித்துக்கொண்டிருந்தபோது நிருபரின் செல்போனை பறித்த இங்கிலாந்து பிரதமர்
புதன் 11, டிசம்பர் 2019 3:35:02 PM (IST)

அமித் ஷாவுக்கு எதிராக தடை: அமெரிக்க சா்வதேச மத சுதந்திர ஆணையம் எச்சரிக்கை
புதன் 11, டிசம்பர் 2019 10:29:30 AM (IST)

ஈகுவடார் நாட்டிலிருந்து நித்தியானந்தா வெளியேறிவிட்டார்: தூதர் அறிவிப்பு!
செவ்வாய் 10, டிசம்பர் 2019 3:52:05 PM (IST)

ஹோட்டல்களில் பெண்களுக்கு தனி நுழைவாயில் தேவையில்லை: சவுதி அரசு அறிவிப்பு
செவ்வாய் 10, டிசம்பர் 2019 12:48:58 PM (IST)

உலகின் இளம் பிரதமரானார் பின்லாந்து பெண் அமைச்சர் சன்னா மரின்!!
செவ்வாய் 10, டிசம்பர் 2019 12:25:41 PM (IST)

மிஸ் யுனிவர்சாக தென் ஆப்பிரிக்க அழகி தேர்வு
திங்கள் 9, டிசம்பர் 2019 4:32:55 PM (IST)
