» செய்திகள் - விளையாட்டு » உலகம்
நமக்கு கவுரம் தான் மிக முக்கியம்; போரை கண்டு அஞ்சக்கூடாது: பாகிஸ்தான் அமைச்சர் பேச்சு!
வியாழன் 8, ஆகஸ்ட் 2019 8:26:44 AM (IST)
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த இந்தியா உடனான தூதரக உறவை ஏன் துண்டிக்கவில்லை? என்று பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஃபவாத் சவுத்ரி கேள்வி எழுப்பினார்.
காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசிக்க இன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ஃபவாத் சவுத்ரி ‘‘ஏன் இந்திய தூதர் இன்னும் பாகிஸ்தானில் இருக்கிறார் ? நாம் ஏன் இன்னும் இந்தியாவுடன் தூதரக உறவை துண்டிக்காமல் இருக்கிறோம்? இருநாடுகள் இடையே தூதரக உறவு இல்லாத நிலையில் நம்முடைய தூதர் இந்தியாவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்?’’ என பல கேள்விகளை எழுப்பினார்.
‘‘பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் அஜய் பிசாரியா மிகவும் நல்ல மனிதர். ஆனால் அவர் ஒரு ஃபாசிச அரசின் பிரதிநிதியாக உள்ளார். காஷ்மீர் மற்றொரு பாலஸ்தீனமாக மாற பாகிஸ்தான் அனுமதிக்க கூடாது’’ ‘மற்ற விஷயங்களை விட நமக்கு கவுரம் தான் மிக முக்கியம். போரா அல்லது அவமானமா ? இந்த இரண்டுக்கும் இடையே ஒன்றை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். கவுரத்திற்காக தான் போர்கள் நடத்தப்படுகின்றன. வெற்றிக்காகவோ தோல்விக்காகவோ அல்ல. எனவே நாம் போரை கண்டு அஞ்சக்கூடாது’’ என்று அமைச்சர் ஃபவாத் சவுத்ரி தெரிவித்தார்.
முன்னதாக ஃபவாத் சவுத்ரி செய்தியாளர்களிடம் பேசிய போது காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பாக பாகிஸ்தான் அரசு சர்வதேச நீதிமன்றத்தை நாடலாம் என கூறினார். அமைச்சர் ஃபவாத் சவுத்ரி போல் பல பாகிஸ்தான் தலைவர்களும் இந்தியாவுடனான தூதரக உறவை ரத்து செய்யும்படி பிரதமர் இம்ரான் கானிடம் வலியுறுத்தி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
samiAug 8, 2019 - 10:28:51 AM | Posted IP 162.1*****
அங்கேயும் ஒரு வைகோ
நிஹாAug 8, 2019 - 09:27:43 AM | Posted IP 162.1*****
கவுரவம் முக்கியம் அமைச்சரே!
மேலும் தொடரும் செய்திகள்

பேட்டி அளித்துக்கொண்டிருந்தபோது நிருபரின் செல்போனை பறித்த இங்கிலாந்து பிரதமர்
புதன் 11, டிசம்பர் 2019 3:35:02 PM (IST)

அமித் ஷாவுக்கு எதிராக தடை: அமெரிக்க சா்வதேச மத சுதந்திர ஆணையம் எச்சரிக்கை
புதன் 11, டிசம்பர் 2019 10:29:30 AM (IST)

ஈகுவடார் நாட்டிலிருந்து நித்தியானந்தா வெளியேறிவிட்டார்: தூதர் அறிவிப்பு!
செவ்வாய் 10, டிசம்பர் 2019 3:52:05 PM (IST)

ஹோட்டல்களில் பெண்களுக்கு தனி நுழைவாயில் தேவையில்லை: சவுதி அரசு அறிவிப்பு
செவ்வாய் 10, டிசம்பர் 2019 12:48:58 PM (IST)

உலகின் இளம் பிரதமரானார் பின்லாந்து பெண் அமைச்சர் சன்னா மரின்!!
செவ்வாய் 10, டிசம்பர் 2019 12:25:41 PM (IST)

மிஸ் யுனிவர்சாக தென் ஆப்பிரிக்க அழகி தேர்வு
திங்கள் 9, டிசம்பர் 2019 4:32:55 PM (IST)

உண்மைதான்Aug 8, 2019 - 11:24:29 AM | Posted IP 162.1*****