» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஹாங்காங் விமான நிலையத்தில் போராட்டம் தணிந்தது: விமானங்கள் மீண்டும் இயக்கம்

புதன் 14, ஆகஸ்ட் 2019 12:52:35 PM (IST)



போராட்டம் தணிந்து இயல்பு நிலை திரும்பி வருவதால் ஹாங்காங் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன.

ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. 10-வது வாரத்தை எட்டியுள்ள இந்த போராட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே பயங்கர வன்முறை வெடித்தது. ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதால் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு விமான நிலையம் மூடப்பட்டது.

இந்நிலையில்,  இன்று அதிகாலை விமான நிலையத்தில் இருந்து போராட்டக்காரர்கள் பெரும்பாலானோர் சென்றனர். இதையடுத்து, ஹாங்காங் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. நள்ளிரவில் இருந்து 12-க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்பட்டு சென்றதாக விமான நிலையத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து புறப்பட இருக்கும் விமானங்களின் அட்டவணைப் பட்டியலும் வெளியிடப்பட்டு இருந்தது.  விமான நிலையத்த்தில் சிறிதளவு போராட்டக்காரர்கள் மட்டுமே இருப்பதாகவும், செக் இன் பகுதி வழக்கம் போல் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory