» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கட்டண பாக்கி செலுத்தாவிட்டால் பிரதமர் அலுவலக மின் இணைப்பு கட்: மின் வாரியம் எச்சரிக்கை

வெள்ளி 30, ஆகஸ்ட் 2019 5:14:30 PM (IST)

நிலுவையில் உள்ள மின்கட்டணத்தை செலுத்தாவிட்டால் பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தின் மின்இணைப்பு துண்டிக்கப்படும் என இஸ்லாமாபாத் மின்விநியோக வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான் கான் இருக்கும் அலுவலகத்தின் மின்சார பாக்கி செலுத்தப்படாததால், இஸ்லாமாபாத் மின்விநியோக வாரியம் பிரதமர் அலுவலகத்துக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. இந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் அலுவலகம் ரூ.41 லட்சம் மின்சார கட்டண பாக்கியை வைத்துள்ளது. கடந்த மாதமே கட்ட வேண்டிய ரூ.35 லட்சம் கட்டணத்தையும் செலுத்தவில்லை. தற்போது லட்சக்கணக்கில் மின்கட்டணம் நிலுவையில் இருக்கிறது.

இது குறித்து பிரதமர் அலுவலகத்துக்கு பல முறை தகவல் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை பதில் ஏதும் வெளிவரவில்லை. தொடர்ந்து  2 மாதங்கள் மின்கட்டணம் செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பை துண்டிக்கலாம் எனும் சட்டம் அமலில் உள்ளது.எனவே, கட்டணத்தை விரைவில் செலுத்தவில்லை என்றால் பிரதமர் அலுவலகத்துக்கு வழங்கப்படும் மின் இணைப்பு துண்டிக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory