» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ட்விட்டர் சிஇஓ கணக்கில் ஹேக்கர்கள் கைவரிசை: இனவெறி கருத்துக்கள் பதிவிட்டதால் சர்ச்சை!!

சனி 31, ஆகஸ்ட் 2019 10:28:35 AM (IST)

ட்விட்டர் சிஇஓ ஜேக் டோர்சியின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்ததுள்ளது.

பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டர் தலைமை செயல் அதிகாரியான (சிஇஒ) ஜேக் டோர்சியின், டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜேக் டோர்சியின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து  திடீரென இனவெறி கருத்துக்களும், நாசி ஜெர்மனிக்கு ஆதரவான கருத்துக்களும் பதிவிடப்பட்டன. ஜேக்டோர்சியை பின் தொடரும் லட்சக்கணக்கான வலைத்தள வாசிகளுக்கு கடும் அதிர்ச்சியை இந்த பதிவு ஏற்படுத்தியது. சிறிது நேரத்தில் இந்த பதிவுகள் நீக்கப்பட்டு விட்டன. 

இது குறித்து விளக்கம் அளித்த ட்விட்டர் நிறுவனம், ஜேக் டோர்சியின் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக விளக்கம் அளித்தது. எனினும், தனது சிஇஓ கணக்கையே பாதுகாப்பாக வைத்திருக்க முடியாத ட்விட்டர் நிறுவனத்தால், எங்கள் கணக்குகளை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்பன போன்ற கேள்விகளை எழுப்பிய ட்விட்டர் பயனாளர்கள், கடுமையாக விமர்சித்தனர். ட்விட்டர் நிறுவனம் அளித்த விளக்கத்தில், தங்களது சொந்த பாதுகாப்பு அமைப்பில் எந்தவித சமரசமும் செய்யப்படவில்லை எனவும்,  ட்விட்டர் கணக்குடன் இணைக்கப்பட்டு இருந்த மொபைல் எண் மூலமாக கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory