» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இங்கிலாந்து காற்றாலை மற்றும் சூரியசக்தி மின்சாரம்: கட்டமைப்புகளை முதல்வர் பார்வையிட்டார்

சனி 31, ஆகஸ்ட் 2019 5:33:08 PM (IST)இங்கிலாந்து நாட்டில் உள்ள காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின்சார கட்டமைப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார் 

இங்கிலாந்தின் சஃபோல்க் நகரில் உள்ள ஐ.பி.ஸ்விட்ச்- ஸ்மார்ட் கிரிட் நிறுவனத்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்றார். அங்கு காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்தி கட்டமைப்புகளை அவர் பார்வையிட்டார். மின்சாரத்தை மின் கட்டமைப்பில் எளிய முறையில் சேர்த்திடும் வழிமுறைகள் மற்றும் அதை சார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார். 

அந்த திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்தும் முறைகள் குறித்து அந்நிறுவனத்தின் உயர் அலுவலர்களிடம் விரிவாக விவாதித்தார்.  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதலமைச்சரின் செயலாளர்கள் சாய்குமார், செந்தில்குமார் ஆகியோர் இந்த நிகழ்வின் போது உடனிருந்தனர். லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்தபடி நாளை அமெரிக்கா புறப்படுகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory