» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சீனப் பொருள்கள் மீது டிரம்ப் அறிவித்த 15 சதவீத கூடுதல் வரி இன்று முதல் அமல்

ஞாயிறு 1, செப்டம்பர் 2019 9:36:30 PM (IST)

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக யுத்தத்தில் சீன இறக்குமதி பொருள்கள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் கடைசியாக அறிவித்த 15 சதவீத கூடுதல் வரி இன்று முதல் அமலுக்கு வருகிறது.

அமெரிக்காவிலிருந்து 112 கோடி டாலர் மதிப்புள்ள பொருள்களை சீனா இறக்குமதி செய்கிறது. இந்த பொருள்களின் மீது 15 சதவீத கூடுதல் வரி விதிக்க அமெரிக்கா அதிபர் உத்தரவிட்டார். இதுவரை சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் நுகர்வு பொருள்கள் மீதான கூடுதல் வரி விதிப்பு அமெரிக்கா தவிர்த்து வந்தது. ஆனால், இப்பொழுது சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நுகர்வு பொருள்களும் கூடுதல் வரி விதிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால் அமெரிக்காவில் உள்ள சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் விலை உயர்ந்தால் நுகர்வோர் செலவிடும் தொகையின் அளவு குறையக்கூடும் என அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.அமெரிக்க சீன அரசுகளின் வர்த்தக போர் காரணமாக கூடுதலாக செலுத்த வேண்டிய தொகையை இனிமேலும் அமெரிக்க வர்த்தக நிறுவனங்கள் தாங்கிக் கொண்டிருக்க முடியாது. இனிமேல் கூடுதல் விலையை அமெரிக்க நுகர்வோரிடம் இருந்து வசூலிக்க அமெரிக்க வர்த்தகர்கள் தீர்மானிக்க கூடும். அப்பொழுது சீனாவிலிருந்து ஏற்றுமதியாகி அமெரிக்காவில் விற்கப்படும் பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளது என அமெரிக்கா தொழில் வர்த்தகத் துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

வரும் டிசம்பர் 15-ம் தேதியிலிருந்து மற்றொரு 15 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வருகிறது. 160 பில்லியன் டாலர் மதிப்புள்ள சீனா ஏற்றுமதி செய்யும் பொருள்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டிருக்கும் கிட்டத்தட்ட சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் 100 சதவீத பொருள்களும் கூடுதல் வரி விதிப்புக்கு இலக்காகிவிடும். அமெரிக்க பொருளாதார ஆய்வு நிறுவனம் ஆகிய ஜேபி மார்கன் அமெரிக்க சீன வர்த்தக போர் காரணமாக அமெரிக்காவில் பொதுமக்கள் எந்த அளவுக்கு கூடுதல் விலை செலுத்த நேரிடும் என ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் ஓராண்டில் 1000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள தொகையை சராசரி அமெரிக்க குடிமகன் ஒருவர் செலுத்த வேண்டி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory