» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் இந்தியாவுக்கு முக்கிய சலுகை: அமெரிக்க அதிபர் டிரம்ப் சூசகம்

வெள்ளி 20, செப்டம்பர் 2019 12:37:23 PM (IST)

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெறும் ஹவ்டி மோடி நிகழ்ச்சியில், இந்தியாவுக்கு சாதகமான சில முக்கிய அறிவிப்புகளை அதிபர் டிரம்ப் வெளியிடுவார் என தெரிகிறது. அதை அவரே சூசகமாக நேற்று தெரிவித்தார். 

பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு ஒரு வார பயணமாக நாளை செல்கிறார். இவரை வரவேற்பதற்காக, ஹூஸ்டன் நகரில் ஹவ்டி மோடி என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் கலந்து கொள்கின்றனர். பிரதமர் மோடியுடன், அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். கலிபோர்னியாவில் இருந்து நேற்று வாஷிங்டன் புறப்பட்ட அதிபர் டிரம்பிடம், ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் ஏதாவது அறிவிப்பு வெளியிடுவீர்களா? என நிருபர்கள் கேட்டனர்.

இதற்கு பதில் அளித்த டிரம்ப், இருக்கலாம். பிரதமர் மோடியுடன் எனக்கு நல்ல நட்பு உள்ளது. ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் நானும் கலந்து கொள்வதாக  அறிவிக்கப்பட்டவுடன், அங்கு கூடும் கூட்டம் இன்னும் அதிகமாக இருக்கும் என நினைக்கிறேன், என்றார். ஹூஸ்டன் சந்திப்புக்கு முன், இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தங்களை இறுதி செய்யும் முயற்சியில் இருநாட்டு அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர். இதனால், இந்தியாவுக்கு சாதகமான வர்த்தக சலுகை சம்பந்தப்பட்ட அறிவிப்பை, ஹவ்டி மோடி கூட்டத்தில் டிரம்ப் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நாளை மறுநாள் அதிபர் டிரம்ப்பை, பிரதமர் மோடி சந்திக்கிறார். அதன்பின் இருவரும் நியூயார்க்கில் ஐ.நா பொதுச்சபை கூட்டத்துக்கு இடையே சந்தித்து பேசவுள்ளனர். ஒரே வாரத்தில் இரு தலைவர்களும் 2 முறை சந்தித்து பேசவுள்ளனர். கடந்த மே மாதம் பிரதமர் மோடி 2வது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்பட்ட பின், ஜப்பானில் நடந்த டி-20 மாநாடு, பிரான்சில் நடந்த ஜி-7 மாநாட்டில் டிரம்ப்பை சந்தித்து பேசினார். இப்போது, மேலும் 2 முறை சந்திக்க உள்ளார். 4 மாத காலத்தில் அமெரிக்க அதிபரை, இந்திய பிரதமர் 4 முறை சந்திப்பது இதுவே முதல் முறை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory