» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை கிடையாது: இந்தியா அறிவிப்பு

சனி 21, செப்டம்பர் 2019 12:50:38 PM (IST)

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவது இல்லை என இந்தியா அறிவித்துள்ளது.

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில், வருகிற 27-ம் தேதி, பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் பேசுகிறார்கள். அக்கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பப்போவதாக இம்ரான்கான் ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்நிலையில், இந்தியாவின் நிலைப்பாடு குறித்து ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சையது அக்பருதீனிடம் கேட்கப்பட்டது. 

அதற்கு அவர் கூறியதாவது: இதுவரை பயங்கரவாதத்தை தேசியமயமாக்கிய பாகிஸ்தான், இப்போது வெறுப்பு பேச்சையும் தேசியமயமாக்க பார்க்கிறது. பாகிஸ்தான் எவ்வளவு தூரம் இறங்கிச் சென்று பேசினாலும், இந்தியா உயர்வாகவே நடந்து கொள்ளும். பாகிஸ்தானுடன் இந்தியா எவ்வித பேச்சும் வைத்துக்கொள்ளாது. ஆனால், அமைதியாக எதிர்கொண்டு, முறையாக பதில் அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory