» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஜெர்மனியில் அவசரமாக தரையிறங்கிய பிரதமர் மோடியின் விமானம்

சனி 21, செப்டம்பர் 2019 4:33:41 PM (IST)

அமெரிக்கா செல்லும் வழியில் பிரதமர் மோடியின் விமானம் அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்டது.

இந்திய பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்காவில் 7 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக நேற்று இரவு டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார்.  இதனிடையே அவரது விமானம், செல்லும் வழியில் அவசர தேவைக்காக, ஜெர்மனியின் பிராங்பர்ட் விமான நிலையத்தில் 2 மணி நேரம் நிறுத்தப்பட்டது.  இது நிகழ்ச்சி நிரலில் இல்லை.

பொதுவாக விமானம் செல்லும் வழியில், எரிபொருள் நிரப்புவதற்காக, எதிர்பாராத வகையிலான தொழில் நுட்ப கோளாறுகள் அல்லது விமானத்தினை தரையிறக்கம் செய்ய வேண்டிய அவசர தேவை ஏற்படும்பொழுது விமானம் தரையிறக்கப்படும்.  இதனை அவசர தேவைக்கான நிறுத்தம் என கூறுகின்றனர். விமானத்தில் இருந்து இறங்கிய பிரதமர் மோடியை, ஜெர்மனி நாட்டுக்கான இந்திய தூதர் முக்தா தோமர், தூதரக அதிகாரி பிரதீபா பார்க்கர் ஆகியோர் வரவேற்றனர். 

ஜெர்மனியில் 2 மணி நேரத்திற்கு பிறகு, அவரது விமானம் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருக்கு புறப்பட்டு சென்றது. இன்று முதல் 27-ஆம் தேதி வரை அமெரிக்காவில் தங்கியிருக்கும் மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். குறிப்பாக டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் ஹவுடி-மோடி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இதே நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்பும் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில், இந்திய வம்சாவளியை சேர்ந்த 50 ஆயிரம் பேர் கலந்து கொள்கின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory