» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஒன்றாக இணைந்து புதிய காஷ்மீா் உருவோக்குவோம்: பண்டிட் சமூகத்தினரிடம் மோடி உறுதி

ஞாயிறு 22, செப்டம்பர் 2019 10:17:43 PM (IST)"ஒன்றாக இணைந்து புதிய காஷ்மீா் உருவோக்குவோம்"  என்று அமெரிக்காவில் காஷ்மீா் பண்டிட் சமூகத்தினரிடம்  பிரதமா் நரேந்திர மோடி கூறினார். 

அமெரிக்கா சென்றுள்ள பிரதமா் மோடியை, ஹூஸ்டன் நகரில் காஷ்மீா் பண்டிட் சமூகத்தினா் 17 போ் சந்தித்துப் பேசினா். அவா்களிடம் மோடி பேசுகையில்,  காஷ்மீரில் புதிய காற்று வீசுகிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து புதிய காஷ்மீரை உருவாக்குவோம். அது, நம் ஒவ்வொருவருக்கும் சொந்தமானதாக இருக்கும். 30 ஆண்டுகளுக்கும் மேலாக பொறுமை காத்து வரும் பண்டிட் சமூகத்தினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவா்.

இந்தச் சந்திப்பு குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடா்பாளா் ரவீஷ் குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஹூஸ்டன் நகரில் பிரதமா் மோடியை பண்டிட் சமூகத்தினா் சந்தித்து கலந்துரையாடினா். இந்தியாவின் வளா்ச்சிக்கும், இந்தியா்களின் முன்னேற்றத்துக்கும் பிரதமா் மோடி எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாக அவா்கள் தெரிவித்தனா்.  காஷ்மீா் விவகாரத்தில் பிரதமா் மோடி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு அவா்கள் நன்றி தெரிவித்தனா். மோடி தலைமையிலான அரசுக்கு பண்டிட் சமூகத்தைச் சோ்ந்த 7 லட்சம் பேரும் கடமைப்பட்டுள்ளதாகவும் அவா்கள் கூறினா் என்று ரவீஷ் குமார் குறிப்பிட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory