» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவில் 11 நாடுகளின் தலைவர்களுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு

செவ்வாய் 24, செப்டம்பர் 2019 5:45:59 PM (IST)

அமெரிக்காவில் 11 நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன்  மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துரையாடினார்

நியூயார்க்கில் பருவநிலை நடவடிக்கை மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மத்தியில் உரையாற்றினார். இதையடுத்து பல்வேறு நாடுகளின் தலைவர்களை தனிப்பட்ட முறையில் நேரில் சந்தித்து அந்தந்த நாடுகளுடனான நட்புறவு, முதலீடு உள்ளிட்ட புரிந்துணர்வு பேச்சுவார்த்தை நடத்தினார். 

இந்நிலையில், பிரதமர் மோடியுடன் அமெரிக்கா சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், பல்கேரியா, துருக்கி, உஸ்பெக்கிஸ்தான், தஜிகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 11 நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, இரு நாடுகள் இடையிலான கூட்டமைப்பு, வர்த்தகம், பொருளாதாரம், பாதுகாப்பு, அமைதி, எரிசக்தி, பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான முக்கியப் நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory