» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தூய்மை இந்தியா திட்டத்திற்காக பிரதமர் மோடிக்கு குளோபல் கோல்கீப்பர் விருது: பில்கேட்ஸ் வழங்கினார்

புதன் 25, செப்டம்பர் 2019 12:55:58 PM (IST)தூய்மை இந்தியா திட்டத்திற்காக பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் குளோபல் கோல்கீப்பர் விருது வழங்கப்பட்டது.

அமெரிக்காவில் 7 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் ஹவுடி-மோடி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.  அமெரிக்க அதிபர் டிரம்பும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.  இந்திய வம்சாவளியை சேர்ந்த 50 ஆயிரம் பேர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். இதனை தொடர்ந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.  

இந்த கூட்டத்தின் இடையே அமெரிக்க அதிபர் டிரம்பும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பின், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தூய்மை இந்தியா திட்டத்திற்காக பிரதமர் மோடிக்கு, பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் நிறுவனம் சார்பில் குளோபல் கோல்கீப்பர் விருது இன்று வழங்கப்பட்டது. இந்த விருது பெற்று கொண்ட பின் பிரதமர் மோடி பேசும்பொழுது, எனக்கு வழங்கப்பட்ட இந்த கவுரவம் என்னுடையது இல்லை.  

தங்களது அன்றாட வாழ்க்கையில் ஒரு பகுதியாக தூய்மை இந்தியா கனவு திட்டத்தினை செயல்படுத்தி வருவதுடன் அதனை நிறைவேற்றிய கோடிக்கணக்கான இந்தியர்களையே சாரும் என்று கூறினார். கடந்த 5 வருடங்களில் 11 கோடிக்கும் கூடுதலான கழிவறைகள் கட்டப்பட்டு உள்ளன.  இந்த நாட்டின் ஏழை மக்கள் மற்றும் பெண்களுக்கு பலனளிக்கும் வகையில் இத்திட்டம் அமைந்தது. இந்தியாவில் கிராமப்புற சுகாதாரம் மேம்பட்டு உள்ள நிலையில், குழந்தைகளுக்கு இதயம் சார்ந்த பிரச்சனைகள் குறைந்துள்ளன.  பெண்களின் உடல் எடையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது கண்டறியப்பட்டு உள்ளது என்று பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் நிறுவன அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory