» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் வாய்ப்பு: இம்ரான்கான் கருத்து

வியாழன் 26, செப்டம்பர் 2019 4:26:10 PM (IST)

காஷ்மீர் விவகாரத்தால் இந்தியாவுடன் போர் மூளும் வாய்ப்பு இருப்பதாக  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார். 

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா நீக்கியதைத் தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. பதற்றத்தை தணிக்குமாறும், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறும் அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி உள்ளார். இருப்பினும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், போர் மூளும் வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார். 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கடந்த 50 நாட்களாக காஷ்மீர் மக்கள், 9 லட்சம் ராணுவ வீரர்களால் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். மக்கள், கூட்டம் கூட்டமாக கைது செய்யப்படுகிறார்கள். மருத்துவமனைகள் இயங்கவில்லை. மீடியாடிக்கள் அதை மூடி மறைக்கின்றன. 80 லட்சம் மக்களும் திறந்தவெளி சிறையில் வைக்கப்பட்டு இருப்பது, இந்த காலத்தில் முன்எப்போதும் இல்லாதது ஆகும். ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டால் என்ன நடக்குமோ என்பதுதான் மிகப்பெரிய கவலையாக இருக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் இந்த இரு அணு ஆயுத நாடுகளும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

saamiSep 29, 2019 - 08:25:12 PM | Posted IP 162.1*****

Actually we are waiting for the day, which ends all the problem. we are not only fighting with you, we are fighting with your supporters- DMK, Congress, The comrades, Mamtha & seemaan- they also get vanished - if it happens. thank u.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory