» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சென்னை உள்ளிட்ட 45 நகரங்கள் கடலில் மூழ்கும் : ஐ.நா. அதிர்ச்சித் தகவல்!

வியாழன் 26, செப்டம்பர் 2019 5:18:19 PM (IST)

காலநிலை மாற்றம் காரணமாக 2100ஆம் ஆண்டுக்குள் சென்னை உள்ளிட்ட 45 நகரங்கள் கடலில் மூழ்கும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

கடல்மட்டம் 50 சென்டி மீட்டர் உயர்ந்தால்கூட சென்னையில் வெள்ளத்தால் சேதம் ஏற்படும் என்ற நிலையில் 2100ஆம் ஆண்டிற்குள் ஒரு மீட்டர் அளவுக்கு கடல்நீர் மட்டம் உயரும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள கடற்கரை நகரங்களான மும்பை, கொல்கத்தா, சூரத் ஆகிய நகரங்கள் உள்பட உலகம் முழுவதும் 45 நகரங்களுக்கு கடல் நீர் உயர்வு அச்சுறுத்தல் உள்ளதாகவும் காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. சபையின் குழு தெரிவித்துள்ளது.

பூமி வெப்பமயமாதல் காரணமாக புயல் தாக்கம் போன்ற தீவிர பாதிப்புகள் இந்த நூற்றாண்டில் பலமுறை, நிகழக்கூடும் என்று காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச அரசு குழு (Intergovernmental Panel on Climate Change (IPCC) மொனகோவில் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory