» செய்திகள் - விளையாட்டு » உலகம்

விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தை கண்டறிய முடியவில்லை: நாசா அறிவிப்பு

வெள்ளி 27, செப்டம்பர் 2019 3:45:05 PM (IST)

தற்போது விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தை கண்டறிய முடியவில்லை என்று நாசா தெரிவித்துள்ளது

நிலவின் தென் துருவத்தை ஆய்வுசெய்ய இஸ்ரோ நிறுவனம் கடந்த ஜூலை மாதம் சந்திராயன் 2 என்ற விண்கலத்தை அனுப்பியது. இந்த விண்கலத்தில் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ஆகியவை இணைந்து அனுப்பப்பட்டிருந்தது. இந்த சந்திராயன் கடந்த மாதம் ஏழாம் தேதி நிலவில் தரையிறங்கும் போது திடீரென தகவல் தொடர்பை இழந்தது. இதனை அடுத்து விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள இஸ்ரோவும், நாசாவும் தீவிரமாக முயற்சி செய்தும் விக்ரம் லேண்டரில் இருந்து எந்தவிதமான சிக்னலும் பெற முடியவில்லை

மேலும் விக்ரம் லேண்டருக்கு உரிய 14 நாள் காலக்கெடு முடிவடைந்து விட்டதால் விக்ரம் லேண்டர்ஃப் நிரந்தரமாக செயலிழந்துவிட்டதாக இஸ்ரோ அறிவித்தது. இந்த நிலையில் அமெரிக்காவின் நாசா என்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு அது குறித்த புகைப்படங்களை அனுப்பியுள்ளது. சந்திராயன்-2வில் இணைத்து அனுப்பப்பட்டிருந்த விக்ரம் செப்டம்பர் ஏழாம் தேதி நிலவில் உள்ள ஒரு உயரமான, மென்மையான, சமவெளியில் தரையிறங்க முயன்றதாகவும் விக்ரமுக்கு இது ஹார்ட் லேண்டிங் ஆக மாறி விட்டதாகவும், தற்போது விக்ரம் லேண்டர் எங்கே உள்ளது என்பதை கண்டறிய முடியவில்லை என்றும் கூறியுள்ளது. இருப்பினும் விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க தங்களது விண்கலம் முயற்சி செய்யும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory