» செய்திகள் - விளையாட்டு » உலகம்

எல்லையில் அத்துமீறித் தாக்குதல்: இந்தியத் தூதரை அழைத்து பாகிஸ்தான் கண்டனம்

புதன் 2, அக்டோபர் 2019 8:12:07 PM (IST)

எல்லையில் அத்துமீறித் தாக்குதல் நடத்தியதாக இந்தியத் தூதரை அழைத்து பாகிஸ்தான் கண்டித்துள்ளது.

நேசபிர்  மற்றும் பாக்சர் செக்டார்களில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இந்தியா அத்துமீறித் தாக்குதல் நடத்துவதாக பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம் சாட்டியுள்ளது.குறிப்பாக பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை இந்திய ராணுவம் குறிவைத்து தானியங்கி இயந்திரத் துப்பாக்கிகள் மற்றும் குண்டுகள் மூலமாகத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது என்று குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவின் தாக்குதலில் ஒரு பெண் உயிரிழந்து விட்டதாகவும் மூன்று பேர் காயம் அடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.இதன் தொடர்ச்சியாக இந்திய  துணைத்தூதர் கவுரவ் அலுவாலியாவை புதனன்று நேரில் அழைத்து பாகிஸ்தான் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory