» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே போட்டியிட அனுமதி: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

சனி 5, அக்டோபர் 2019 4:06:54 PM (IST)

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே  போட்டியிட அனுமதி அளித்து  நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கை அதிபர் தேர்தல் நவம்பர் 16-ந்தேதி நடக்கிறது. அதில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் தம்பியும், முன்னாள் பாதுகாப்பு ஆலோசகருமான கோத்தபய ராஜபக்சே போட்டியிடுகிறார். ராஜபக்சே கட்சியின் வேட்பாளராக அவர் மனுதாக்கல் செய்துள்ளார். இதற்கிடையே, அவர் இலங்கை குடிமகன் அல்ல, அமெரிக்க குடியுரிமை பெற்றவர் என்றும், அவரது இலங்கை குடியுரிமை சான்றிதழ் போலியாக உருவாக்கப்பட்டதாகவும் இலங்கை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இலங்கை அரசியல் சட்டப்படி, அந்நாட்டு குடிமகன் மட்டுமே அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும். கோத்தபய, தேர்தலில் போட்டியிட தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுவில் கோரப்பட்டு இருந்தது. இந்த மனுக்களை பரிசீலித்த இலங்கை கோர்ட், மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.  இதையடுத்து, இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே போட்டியிடுவதில் இருந்த சிக்கல் நீங்கியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory