» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு : மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது

திங்கள் 7, அக்டோபர் 2019 5:10:43 PM (IST)

2019ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு, உடலில் இருக்கும் செல்கள் பிராணவாயுவை எவ்வாறு உட்கிரகிக்கின்றன என்பதை கண்டுபிடித்த 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

மனித உடல்களில் இருக்கும் செல்கள் மற்றும் செல்கள் எவ்வாறு ஆக்ஸிஜனை உட்கிரகிக்கின்றன என்பது குறித்து ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகளுக்கு இந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் ஜி கேலின், கிரெக் செமன்கா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த சர் பீட்டர் ராட்கிளிஃப், ஆகிய 3 பேருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.புற்றுநோய் உள்ளிட்ட முக்கிய நோய்களைப் பற்றிய ஆராய்ச்சிக்கு இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் மிகுந்த பயனளிக்கும் என்பதால் இம்மூன்று விஞ்ஞானிகளுக்கும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory