» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொள்ளவில்லை: எப்.ஏ.டி.எப் குற்றச்சாட்டு

செவ்வாய் 8, அக்டோபர் 2019 9:03:04 AM (IST)

பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொள்ளவில்லை என சர்வதேச அமைப்பான எப்.ஏ.டி.எப் (FATF) குற்றம்சாட்டி உள்ளது.

எப்.ஏ.டி.எப் (FATF) என்பது தீவிரவாத குற்றங்கள், அது தொடர்பான பொருளாதார குற்றங்கள், பண மோசடிகள் குறித்து விசாரிக்கும் அமைப்பாகும். தீவிரவாதிகளுக்கு எப்படி பணம் கிடைக்கிறது என்பதை இந்த அமைப்பு தீவிரமாக கண்காணிக்கும். இதன் அடிப்படையில் உலகில் உள்ள நாடுகளை இது தரம் பிரிக்கும். தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடுகளை எப்.ஏ.டி.எப் (FATF) பிளாக் லிஸ்ட் செய்வது வழக்கம்.

தீவிரவாதிகளுக்கு நிதி கொடுப்பது மற்றும் தீவிரவாத அமைப்புகள் மீது கட்டுபாடுகளை விதிக்காமல் இருப்பது குறித்து, எப்.ஏ.டி.எப் அமைப்பு முன்னரே பாகிஸ்தானை க்ரே (Grey) பட்டியலில் வைத்திருந்தது. இன்னும் ஒரு வாரத்தில் அது குறித்து மறுபரிசீலனை செய்ய உள்ளநிலையில் இந்த தகவலை எப்.ஏ.டி.எப் (FATF) அமைப்பு வெளியிட்டுள்ளது. தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதை தடுக்க வேண்டும் என கடந்த ஜூன் மாதமே எப்.ஏ.டி.எப் (FATF) எச்சரித்திருந்தும், அதனையும் பாகிஸ்தான் கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றம்சாட்டி உள்ளது. .

கடந்த ஆண்டு ஜூன் மாதம், எப்.ஏ.டி.எப் (FATF) அமைப்பு, பாகிஸ்தானை க்ரே பட்டியலில் சேர்த்தபோது அந்த அமைப்பு அக்டோபர் வரை காலக்கெடு தருவதாகவும், அதற்குள் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்தும், தீவிரவாதிகளுக்கு நிதி கொடுப்பது குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானை வலியுறுத்தி இருந்தது.

இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், தீவிரவாதத்திற்கு எதிராகவும், அவற்றை ஒடுக்குவது தொடர்பாகவும், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அளித்த, 40 தீர்மானங்களில், 36 தீர்மானங்களை பாகிஸ்தான் நிறைவேற்ற தவறிவிட்டதாக தெரிவித்திருக்கிறது. மேலும் பயங்கரவாதத்தை தனது மண்ணிலிருந்து அகற்றுவதாக, ஐக்கிய நாடுகள் அவையில் குறிப்பிட்ட 4 தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு கூட பாகிஸ்தான் முயற்சிக்கவில்லை என்றும், எப்.ஏ.டி.எப் (FATF) சுட்டிக்காட்டியிருந்தது. இந்நிலையில் வரும் அக்டோபர் 13 முதல் 18ந் தேதி வரை பாரீசில் எப்.ஏ.டி.எப் (FATF)-ன் சந்திப்பு நடைபெற உள்ளது. அப்போது, பாகிஸ்தானை மீண்டும் க்ரே பட்டியலிலேயே வைத்திருக்க எப்.ஏ.டி.எப் முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory