» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சாப்பாட்டில் தலை முடி கிடந்ததால் மனைவிக்கு மொட்டையடித்த கணவன் கைது!!

புதன் 9, அக்டோபர் 2019 8:30:26 AM (IST)

வங்கதேசத்தில் சாப்பாட்டில் தலைமுடி கிடந்ததால் கோபத்தில் மனைவிக்கு கணவன் மொட்டையடித்த கணவனை போலீசார் கைது செய்தனர். 

வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள  ஜோய்பூரட் மாகாணத்தைச் சேர்ந்தவர் பப்ளு மொண்டல் (35) இவருடைய மனைவி, சில தினங்களுக்கு முன்பு அவருக்கு இரவு சாப்பாடும், பாலும் கொடுத்துள்ளார். அந்த இரண்டிலும் தலைமுடி இருந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பப்ளு மொண்டல் தன்னுடைய மனைவிக்கு மொட்டை அடித்துள்ளார். கோபத்தில் பிளேடால் அவருடைய தலைமுடியை சரைத்துள்ளார். 

இதனால் வலி தாங்க முடியாமல் அவருடைய மனைவி அலறி உள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி பப்ளுவை கைது செய்தனர். அவருக்கு 14 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவமானது வங்கதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory