» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்கா-ஆப்கானிஸ்தான் படைகள் தாக்குதல் : அல் கொய்தா தளபதி கொல்லப்பட்டான்

புதன் 9, அக்டோபர் 2019 10:57:40 AM (IST)

அமெரிக்கா- ஆப்கானிஸ்தான் படைகள் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் இந்திய துணை கண்டத்துக்கான அல் கொய்தா தளபதி உள்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மற்றும் அல்கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டுவருகிறது. அந்த பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்கும் நோக்கில் ஆப்கானிஸ்தான் அரசு படைகளுடன் இணைந்து அமெரிக்க படைகளும் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டின் ஹெல்மண்ட் மாகாணத்தின் மூசா ஹலா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து அமெரிக்கா-ஆப்கானிஸ்தான் படைகள் இணைந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது படையினர் நடத்திய தாக்குதலில்  இந்திய துணை கண்டத்துக்கான அல்கொய்தா தளபதி அசீம் உமர் உள்பட 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த அசீம் உமர் இந்தியாவில் பிறந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory