» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சவுதி அரேபியாவில் கோர விபத்து: புனித யாத்திரை சென்ற வெளிநாட்டினர் 35 பேர் பலி

வியாழன் 17, அக்டோபர் 2019 12:06:21 PM (IST)

சவுதி அரேபியா மதினா அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் புனித யாத்திரை சென்ற வெளிநாட்டினர் 35 பேர் உயிரிழந்தனர்

சவுதி அரேபியா மதினா அருகே ஹஸ்ரா சாலையில், 39 பேருடன் புனித யாத்திரை சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று, அந்நாட்டு நேரப்படி இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதி கோர விபத்துக்குள்ளானது.  இந்த கோர விபத்தில், புனித யாத்திரை சென்ற வெளிநாட்டினர் 35 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் பலத்த காயங்களுடன் அல் ஹம்மா நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory