» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து நல்லுறவுடன் செயல்பட வேண்டும்: சீனா வலியுறுத்தல்

சனி 19, அக்டோபர் 2019 12:29:52 PM (IST)

இந்தியாவும் பாகிஸ்தானும் நல்லுறவுடன் செயல்பட வேண்டும் என்று இந்தியாவுக்கான சீன தூதர், சுன் வெய்டாங் வலியுறுத்தியுள்ளார். 

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்ததையடுத்து, பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக கடுமையான பகையுணர்வை காட்டி வருகிறது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் தணிந்த பாடில்லை. இந்த சூழலில், இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து நல்லுறவுடன் செயல்பட வேண்டும் என்று சீனா தெரிவித்துள்ளது. 

இந்தியாவுக்கான சீன தூதர், சுன் வெய்டாங் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.  சீன தூதர் சுன் வெய்டாங் மேலும் கூறுகையில், " சீனாவும் இந்தியாவும் பிராந்தியத்தில் செல்வாக்குடன் விளங்கும் மிகப்பெரிய நாடுகள் ஆகும்.  இந்தியா -  சீனா மட்டும் இல்லாது இந்தியா  - பாகிஸ்தான் இடையேயும் நல்ல உறவு தொடர வேண்டும் என்று சீனா விரும்புகிறது.  பிராந்தியத்தில் உள்ள நாடுகள் கைகோர்த்து அமைதி மற்றும் ஸ்திரதன்மை, வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory