» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகள் தாக்குதல் : பத்து ஐ.எஸ் பயங்கரவாதிகள் பலி

சனி 19, அக்டோபர் 2019 8:32:40 PM (IST)

ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகள் நடத்திய தேடுதல் வேட்டையில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் 10 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானின் கிழக்கு நன்கர்ஹார் மாகாணத்தில் உள்ள அச்சின் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் கடந்த 24 நேரத்திற்குள் 10 ஐ.எஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சில தினங்களுக்கு முன்பு தொடங்கிய சோதனையில் இருந்து அவர்களிடம் இருந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அவர்களது மறைவிடங்கள், பதுங்கு குழிகள் மற்றும் கட்டுப்பாடு மையங்களை பாதுகாப்புப் படையினர் அழித்துள்ளதாகவும், இரண்டு கண்ணிவெடிகளையும் கண்டுபிடித்து செயலிழக்கச் செய்ததாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory