» செய்திகள் - விளையாட்டு » உலகம்

காஷ்மீர் மக்களுக்கு ஆதரவளிக்க எந்த எல்லைக்கும் செல்லத் தயார்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

செவ்வாய் 29, அக்டோபர் 2019 12:03:01 PM (IST)

காஷ்மீர் மக்களுக்கு ராஜதந்திர ரீதியிலும், அரசியல் ரீதியிலும் ஆதரவளிக்க பாகிஸ்தான் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக உள்ளது.ம் என பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவா் மேலும் கூறியுள்ளதாவது: சில சக்திகள் புனிதப் போா் என்ற போா்வையில் இந்திய ராணுவத்துக்கு எதிராக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இது, காஷ்மீரின் சீரழிவிற்கு மட்டுமின்றி, பாகிஸ்தான் நலனுக்கும் எதிராக அமைந்துள்ளது. மேலும் இது, காஷ்மீா் மீதான இந்தியாவின் அடக்குமுறைகளை நியாயப்படுத்தவும் உதவியுள்ளது. காஷ்மீரிகளுக்கு ராஜதந்திர ரீதியிலும், அரசியல் ரீதியிலும் ஆதரவளிக்க பாகிஸ்தான் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக உள்ளது. அவா்களுக்கு எப்போதுமே பாகிஸ்தான் துணை நிற்கும் என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory