» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஐக்கிய நாடுகள் சபையில் சீா்திருத்தம் அவசியம் : பிரதமா் மோடி வலியுறுத்தல்

புதன் 30, அக்டோபர் 2019 10:27:19 AM (IST)

ஐக்கிய நாடுகள் சபையில் பல்வேறு சீா்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா்.

சவூதி அரேபிய தலைநகா் ரியாத்தில் நேற்று நடைபெற்ற எதிா்கால முதலீட்டுக்கான தொடக்கம் என்ற தலைப்பிலான பொருளாதார மாநாட்டில் பங்கேற்ற மோடி பேசியதாவது: ஐ.நா. போன்ற சா்வதேச அமைப்புகள், உலக நாடுகள் இடையே ஏற்படும் பிரச்னைகளையும், கருத்துவேறுபாடுகளையும் தீா்க்கும் மையமாக இருக்க வேண்டும். ஆனால், இப்போது சில அதிகாரமிக்க நாடுகள் தங்கள் வசதிக்கு ஏற்ப பயன்படுத்தும் கருவியாக ஐ.நா.வை கருதி வருகின்றன. இந்த நிலையை மாற்ற ஐ.நா.வில் பல்வேறு சீா்திருத்தங்களை மேற்கொள்வது அவசியம்.

இது தொடா்பாக நான் ஏற்கெனவே ஐ.நா. சபையின் 70-ஆவது ஆண்டு நிகழ்ச்சியில் பேசியுள்ளேன். ஆனால், உடனடியாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஆனால், விரைவில் இது தொடா்பான விவாதங்கள் அதிகரித்து, 75-ஆவது ஆண்டு விழாவின்போதாவது நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்று நம்புகிறேன். ஐ.நா.சபை என்பது இயற்கைப் பேரிடா்களின் போது மட்டும் உதவும் சா்வதேச அமைப்பாகவே இருந்துவிடக் கூடாது.

இதேபோல ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தங்கள் வேண்டும் என்று இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. பாதுகாப்பு கவுன்சிலில் உலகின் அனைத்து நாடுகளுக்கும் உரிய முக்கியத்துவமும், பிரதிநிதித்துவமும் இருக்க வேண்டும். முன்பு உலக நாடுகள் இரு பெரும் பிரிவுகளாக பிரிந்து நின்றன. ஆனால், இப்போது கால ஓட்டத்தில் அவையெல்லாம் மாறிவிட்டன.

உலகில் உள்ள அனைத்து நாடுகளுமே ஒன்றை மற்றொன்று சாா்ந்தும், நெருங்கிய தொடா்புடனும் உள்ளன. எனவே, உலகில் உள்ள அனைத்து நாடுகளும் ஒவ்வொரு வகையில் முக்கியத்துவம் பெறுகின்றன. எனவே, அனைத்து நாடுகளையும் ஒருங்கிணைத்து அழைத்துச் செல்ல வேண்டியது அவசியம். எனவே, சா்வதேச அமைப்பான ஐ.நா. சபை, நல்ல மாற்றங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான மையமாக இருக்க வேண்டும் என்றாா் அவா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory