» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கை அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு: தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவிப்பு

வியாழன் 7, நவம்பர் 2019 5:25:31 PM (IST)

இலங்கை அதிபர் தேர்தலில் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதாக பிரதான தமிழ் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

இலங்கையில் வருகிற 16-ந் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித்  பிரேமதாசாவுக்கு பூரண ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், தவறான முடிவு பேரழிவுக்கு வழிவகுக்கலாம். எனவே நன்கு ஆராய்ந்து இந்த முடிவை எடுத்துள்ளோம். நான்கு கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்துடன் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் பிரதான கட்சியான இலங்கை தமிழரசு கட்சி, அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்குவதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது. இந்நிலையில் கூட்டமைப்பின் நிலைப்பாடும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் 8.5 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வாக்களிக்க பதிவு செய்துள்ளனர், அதே சமயம் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்கள மக்கள் நாட்டின் மிகப்பெரிய தேர்தலில் இரண்டு வாரங்களுக்குள் வாக்களிக்க உள்ளனர்.

அதிபர் தேர்தல் நடைபெற இன்னும் 9 நாட்கள் உள்ள நிலையில் வெற்றி வாய்ப்பு குறித்து பல்வேறு கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன. இதுவரை வெளியான கருத்துக் கணிப்புகளில் ஐக்கிய தேசிய முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசா முன்னிலை பெறுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் 8.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாக்களிக்க பதிவு செய்துள்ளனர், அதே சமயம் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்கள் வசிக்கும் கிழக்கு மாகாணத்தில் வாக்களிக்க கிட்டத்தட்ட 12 லட்சம் பேர் பதிவு செய்து உள்ளனர். மொத்தம் 1.6 கோடி இலங்கை மக்கள் நாட்டின் மிகப்பெரிய அதிபர்  தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory