» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கையில் வாக்காளர்கள் பேருந்து மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு

சனி 16, நவம்பர் 2019 10:45:43 AM (IST)

இலங்கையில் வாக்காளர்கள் வந்து கொண்டிருந்த பேருந்து மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இலங்கையின் 8-ஆவது அதிபா் தோ்தல் சனிக்கிழமை (நவ. 16) நடைபெறுகிறது. சனிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப் பதிவு, மாலை 5 மணி வரை நடைபெறும்.இதில், இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி சாா்பில் கோத்தபய ராஜபட்ச (70), ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் சாா்பில், முன்னாள் அதிபா் பிரேமதாசாவின் மகனும், வீட்டு வசதி மற்றும் கலாசார விவகார அமைச்சருமான சஜித் பிரேமதாசா (52) போட்டியிடுகிறாா். இவா்களைத் தவிர, இந்தத் தோ்தலில் 35 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இத்தோ்தலில் வாக்களிக்க 1.59 கோடி போ் பதிவு பெற்றுள்ளனா். 

இந்நிலையில், மன்னார் பகுதியில் வாக்குச்சாவடியை நோக்கி வாக்காளர்களுடன் வந்துகொண்டிருந்த 2 பேருந்துகள் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் காணப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory