» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இலங்கை அதிபர் தேர்தல்: 13 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்சே வெற்றி
ஞாயிறு 17, நவம்பர் 2019 6:53:23 PM (IST)

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே 13 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இலங்கையில் நேற்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்ற ஒரு கோடியே 59 லட்சத்து 92 ஆயிரத்து 96 பேரில் சுமார் 80 சதவீதம் மக்கள் வாக்களித்திருந்னர். நேற்றிரவு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை இன்று பிற்பகல் சுமார் 3 மணியளவில் முடிவடைந்தது. முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே சகோதரரும், அந்நாட்டின் முன்னாள் ராணுவ மந்திரியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியின் வேட்பாளருமான கோத்தபய ராஜபக்சே 52.25 சதவீதம் (69 லட்சத்து 24 ஆயிரத்து 255) வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றதாக இலங்கை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
ஆளும்கட்சி வேட்பாளராக அவரை எதிர்த்து போட்டியிட்ட சஜித் பிரேமதாசா 41.99 சதவீதம் (55 லட்சத்து 64 ஆயிரத்து 239) வாக்குகளை பெற்றார்.இதர வேட்பாளர்கள் அனைவரும் மொத்தமாக 5.76 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளனர் என இலங்கை தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சஜித் பிரேமதாசா, ராஜினாமா
இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஆளும் கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா, தனது தோல்வியை ஒப்புக் கொண்டார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், இலங்கையின் புதிய அதிபராக வெற்றி பெற்றுள்ள கோத்தபய ராஜபக்சேவை பாராட்டுகிறேன். மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். இந்நிலையில், இலங்கை அதிபர் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து, சஜித் பிரேமதாசா தனது கட்சியின் துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காஷ்மீரில் மனித உரிமைக்கு பாதுகாப்பு இல்லை இந்திய வம்சாவளி பெண் எம்.பி. தீர்மானம் தாக்கல்
ஞாயிறு 8, டிசம்பர் 2019 5:48:28 PM (IST)

நிதி நெருக்கடியில் தத்தளிக்கும் பாகிஸ்தானுக்கு 9,360 கோடி அவசர கடன்: ஆசிய வளர்ச்சி வங்கி அறிவிப்பு!
சனி 7, டிசம்பர் 2019 12:30:50 PM (IST)

நித்யானந்தாவிற்கு அடைக்கலம் வழங்கவில்லை; தீவு எதையும் விற்கவில்லை: ஈகுவடார் மறுப்பு
வெள்ளி 6, டிசம்பர் 2019 5:51:51 PM (IST)

அதிபர் டிரம்ப் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் : அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல்
வியாழன் 5, டிசம்பர் 2019 8:28:43 AM (IST)

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக கமலா ஹாரிஸ் அறிவிப்பு
புதன் 4, டிசம்பர் 2019 12:13:49 PM (IST)

தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பு அல்ல: சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பு - 12பேர் விடுதலை!!
புதன் 4, டிசம்பர் 2019 11:56:07 AM (IST)
