» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஈகுவடார் நாட்டிலிருந்து நித்தியானந்தா வெளியேறிவிட்டார்: தூதர் அறிவிப்பு!

செவ்வாய் 10, டிசம்பர் 2019 3:52:05 PM (IST)

ஈகுவடார் நாட்டிலிருந்து நித்தியானந்தா வெளியேறிவிட்டதாக அந்நாட்டு தூதர் தெரிவித்துள்ளார்.

நித்தியானந்தா ஈகுவடார் நாட்டிலிருந்து ஒரு கடற்கரை தீவை சொந்தமாக வாங்கி, அதற்கு கைலாசா என்று பெயரிட்டு புதிய நாடாக அறிவித்துள்ளார். இதற்கென தனி இணையதளம், பாஸ்போர்ட், சின்னம் உள்ளிட்டவையும் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், தனி நாடு அந்தஸ்து கோரி ஐ.நா சபையிடம் விண்ணப்பித்துள்ளார். எனினும் இந்த தகவலை ஈகுவடார் முற்றிலும் மறுத்துள்ளது.
 
இதுதொடர்பாக தி கார்டியர் ஆங்கில நாளேட்டில் வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ள இங்கிலாந்து நாட்டுக்கான ஈகுவடார் தூதர் ஜெய்ம் மார்ச்சன் ரோமிரோ, "இந்திய நாட்டைச் சேர்ந்த நித்தியானந்தா என்பவர் எங்கள் நாட்டில் சொந்தமாக தீவு வாங்கி தனி தேசத்தை நிர்மாணித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், நித்தியானந்தாவோ அல்லது அவரது கூட்டாளிகளோ ஈகுவடாரில் அவர்களை பின்பற்றுபவர்களுக்காக தனி தேசத்தை நிறுவியிருக்கலாம் என்பது தவறானது என ஈகுவடார் தூதரகம் தெளிவுபடுத்துகிறது” என்று விளக்கமளித்துள்ளார்.
 
மேலும், "ஈகுவடார் ஒரு இறையாண்மையுள்ள, சுயாதீன குடியரசு நாடாகும். இங்கு சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய எந்த வெளிநாட்டுக்காரரும் எந்த நிலமும் வாங்கவில்லை. நித்தியானந்தா 2018ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதியன்று ஈகுவடாரின் குவாயாகில் சுற்றுலாப் பயணியாக நுழைந்து பின்னர் சர்வதேச பாதுகாப்பு அந்தஸ்த்துக்கு விண்ணப்பித்தார். அவருடைய கோரிக்கையை பரிசீலித்து 2018 அக்டோபர் 19ஆம் தேதி தற்காலிக விசா வழங்கப்பட்டது. 

"பின்னர் அகதி அந்தஸ்த்துக்கு விண்ணப்பித்த நித்தியானந்தாவின் கோரிக்கையை கவனமாக பரிசீலித்த ஈகுவடார் தேசிய ஆணையம் அதனை நிராகரித்தது. எனினும் தனக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஈகுடவார் நீதிமன்றத்தில் புகார் மனு அளித்தார். இதனிடையே 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நித்தியானந்தா ஈகுவாடர் விட்டு வெளியேறினார். அவர் ஹைதி நாட்டுக்குச் சென்றிருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory