» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட கூடாது : ரஷியாவுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை

வியாழன் 12, டிசம்பர் 2019 5:40:57 PM (IST)

அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட கூடாது என ரஷியாவுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் ரஷியா தலையீடு இருந்ததாகவும், டிரம்பை வெற்றி பெற செய்ய ரஷிய அதிகாரிகள் உதவியதாகவும் புகார் எழுந்தது. இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. இந்த புகார் தொடர்பாக ராபர்ட் முல்லர் தலைமையிலான விசாரணைக்குழு சுமார் 2 ஆண்டு காலம் விசாரணை நடத்தி கடந்த ஏப்ரல் மாதம் தனது அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ததது. 

அதில், 2016-ம் ஆண்டு அதிபர் தேர்தலின் போது, டிரம்போ அவரது பிரசார குழுவை சேர்ந்தவர்களோ ரஷியாவுடன் சேர்ந்து சதி செய்தார்கள் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என கூறப்பட்டது. இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட கூடாது என ரஷியாவுக்கு அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ள ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை சந்தித்து பேசினார்.

இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், "செர்ஜி லாவ்ரோவுடன், உக்ரைன் விவகாரம் உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்திய அதிபர் டிரம்ப், அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் அதிபர் தேர்தலில் தலையிடுவதற்கு ரஷியா எந்தவொரு முயற்சிகளையும் செய்யக்கூடாது என கடுமையாக எச்சரித்தார்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் டிரம்ப் உடனான சந்திப்புக்கு பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த செர்ஜி லாவ்ரோவ், தாங்கள் இருவரும் தேர்தல் குறித்து எந்த விவாதமும் நடத்தவில்லை என கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory