» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பிரெக்ஸிட்டை நிறைவேற்ற இங்கிலாந்து மக்கள் சக்திவாய்ந்த உத்தரவு: போரிஸ் ஜான்சன் பெருமிதம்

வெள்ளி 13, டிசம்பர் 2019 12:00:24 PM (IST)

பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவதற்கு மக்கள் சக்திவாய்ந்த் உத்தரவை வழங்கி உள்ளனர் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறி உள்ளார்.

650 இடங்களை கொண்ட இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடந்தது. இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து முழுவதும் உள்ள 650 தொகுதிகளில் உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இங்கிலாந்தை பொறுத்தவரையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். அந்த வகையில் தற்போது 4 கோடியே 60 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.  

வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்குள் எண்ணும் பணி துவங்கியது.  இதில் துவக்க நிலையில்,  கருத்து கணிப்புகளுக்கு மாறாக தொழிலாளர் கட்சி சில இடங்களில் முன்னிலை பெற்றது. ஆனால், சிறிது நேரத்திலேயே நிலமை மாறி, கன்சர்வேட்டிவ் கட்சி முன்னிலை பெறத்தொடங்கியது.  

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 326 இடங்களில் வெற்றி பெற வேண்டியது கட்டாயம் ஆகும். கன்சர்வேட்டிவ் கட்சி 337 இடங்களில் அதிக பெருமபான்மை வெற்றி பெற்று உள்ளது .  தொழிலாளர் கட்சி 199 இடங்களில் வென்றுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து  பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது அரசாங்கம் பிரெக்ஸிட்டைச் செய்வதற்கான சக்திவாய்ந்த புதிய உத்தரவை பெற்று உள்ளதாக  தெரிகிறது என கூறி உள்ளார்.

மேலும் போரிஸ் ஜானசன் கூறியதாவது: பிரெக்ஸிட்டைச் செய்து முடிக்க, பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவதற்கு மட்டுமல்லாமல், இந்த நாட்டை ஒன்றிணைத்து முன்னோக்கி எடுத்துச் செல்லவும் இந்த ஒரு நாடு கன்சர்வேடிவ் அரசுக்கு  ஒரு சக்திவாய்ந்த புதிய உத்தரவு வழங்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது. இது இப்போது ஒரு வரலாற்றுத் தேர்தலாக மாறும் என நான் நினைக்கிறேன். இந்த புதிய அரசாங்கத்தில், இங்கிலாந்து  மக்களின் ஜனநாயக விருப்பத்தை மதிக்க, இந்த நாட்டை சிறப்பாக மாற்றுவதற்கும், ஒட்டுமொத்த மக்களின் திறனையும் கட்டவிழ்த்து விடுவதற்கும் வாய்ப்பு அளித்துள்ளது இந்த நாடு என்று அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory