» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஓமன் மன்னர் காபூஸ் அல் சையத் மறைவு; இந்தியாவில் துக்கம் அனுசரிப்பு

ஞாயிறு 12, ஜனவரி 2020 6:25:04 PM (IST)

ஓமன் நாட்டின் மன்னர் காபூஸ் பின் சையத் மறைவையடுத்து இந்தியாவில் நாளை அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

40 ஆண்டுகளுக்கும் மேலாக ஓமன் நாட்டில் ஆட்சி செய்து வந்த சுல்தான் காபூஸ் பின் சையத் அல் சையத் காலமானார். அவருக்கு வயது 79. 1970-களில் அவரது தந்தை சயித் பின் தைமூரை ஆட்சியில் இருந்து கவிழ்த்துவிட்டு பதவிக்கு வந்த காபூஸ் பின் சையத் அல் சையத், எண்ணெய் வளமிக்க ஓமன் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் பெல்ஜியத்தில் சிகிச்சை பெற்று நாடு திரும்பினார். 

நேற்று காபூஸ் மரணமடைந்ததாக ஓமன் அரசு தெரிவித்தது. இதனை தொடர்ந்து ஓமன் மன்னர் சுல்தான் மறைவுக்கு நாளை இந்தியாவில் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. நாளை இந்திய தேசியக்கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அரசு சார்ந்த பொழுது போக்கு நிகழ்வுகள் எதுவும் நாளை நடைபெறாது என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory