» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவி நீக்க தீர்மானம் : செனட் சபையில் 21ம் தேதி விசாரணை

புதன் 15, ஜனவரி 2020 9:18:36 AM (IST)

அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவி நீக்க தீர்மானத்தின் மீதான விசாரணை செனட் சபையில் வரும் 21ம் தேதி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அமெரிக்க அதிபர் டொன்ல்ட் டிரம்ப் மீது எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி பதவி நீக்க தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. நாடாளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபையில் கடந்த மாதம் 18ம் தேதி இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, மேலவையான செனட் சபையில் தீர்மானம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். செனட் சபையில் 3ல் 2 பங்கு ஆதரவு இருந்தால் மட்டுமே தீர்மானத்தை நிறைவேற்ற முடியும். ஆனால், 100 உறுப்பினர்கள் கொண்ட செனட் சபையில் ஆளும் குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால், இத்தீர்மானம் தோல்வி அடைவதற்கே வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை என சுமார் 20 நாட்களாக தீர்மானத்தை விவாதத்துக்கு அனுப்பாமல் சபாநாயகர் பெலோசி இழுத்தடித்து வருகிறார். தற்போது அதிபருக்கு எதிராக புதிய இமெயில் ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சபாநாயகர் பெலோசி கூறிய நிலையில், விரைவில் செனட் சபையில் பதவி நீக்க தீர்மானத்தின் விசாரணை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து குடியரசு கட்சி செனடர் ஜான் கார்ன்யன் அளித்த பேட்டியில், ‘‘வரும் 21ம் தேதி பதவி நீக்க தீர்மானத்தின் மீதான விசாரணை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேறி 3 வாரம் கடந்து விட்ட நிலையிலும் இன்னும் சபாநாயகர் தாமதித்து வருகிறார். இந்த விவகாரத்தை அரசியல் ஆதாயத்தை கருத்தில் கொண்டு சபாநாயகர் காய் நகர்த்தி வருவது வேதனை அளிக்கிறது’’ என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory