» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கனடாவின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்கு மகத்தானது: பிரதமர் பொங்கல் வாழ்த்து

வியாழன் 16, ஜனவரி 2020 4:43:01 PM (IST)

கனடாவின் வளர்ச்சி, வலிமையில் தமிழர்களின் பங்கு மகத்தானது என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். .

இது தொடர்பாக டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது: வணக்கம்,கனடா மற்றும் உலகம் முழுவதும் வசிக்கும் தமிழ் மக்கள் அனைவரும், தமிழர்களின் அறுவடை நாளான தை பொங்கலை கொண்டாட உள்ளனர். அறுவடை முடிந்து, புத்தாண்டு துவங்குவதை , பொங்கல் பண்டிகை குறிக்கிறது. 

இந்த கொண்டாட்டத்தின் போது, குடும்பத்தினர், நண்பர்கள் பொங்கலை பகிர்ந்து, புத்தாண்டு துவங்குவதை கொண்டாட ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. கனடாவில், ஜனவரி தமிழ் பாரம்பரிய மாதமாக அனுசரிக்கப்படுகிறது. இது கனடாவில் வசிக்கும் தமிழர்களின் நம்பிக்கையை அங்கீகரிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. கனடாவின் வலிமையிலும், செழுமையிலும் தமிழர்களின் பங்கு மகத்தானது. அவர்கள், இன்னும் பல முக்கிய பணியாற்ற உள்ளனர். பொங்கல் பண்டிகை கொண்டாடும் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory