» செய்திகள் - விளையாட்டு » உலகம்

உலகப் பொருளாதாரத்தைச் சீரழிக்கும் கொரோனா : சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை

செவ்வாய் 18, பிப்ரவரி 2020 8:12:47 PM (IST)

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சீனாவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பால் அங்கு 1,800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு, 72,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் அச்சத்தால் சீன நாட்டு மக்கள் பெரும் இன்னல்களைச் சந்தித்துள்ளதோடு, அந்நாட்டின் தொழில் துறை முடங்கி பொருளாதார வீழ்ச்சியை நோக்கி அந்நாடு சென்று கொண்டிருக்கிறது. சீன நாட்டுடன் ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகம் மேற்கொள்ளவே உலக நாடுகள் தயங்குகின்றன. இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகப் பொருளாதாரம் 2020ஆம் ஆண்டில் வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநரான கிறிஸ்டாலினா ஜியார்ஜீவா தெரிவித்துள்ளார். துபாயில் நடைபெற்ற சர்வதேசப் பெண்கள் மாநாட்டில் அவர் பேசுகையில், கொரோனா பாதிப்பால் உலகப் பொருளாதாரத்தில் 0.1 முதல் 0.2 சதவீதம் வரையில் வீழ்ச்சி இருக்கும் என்றும் மதிப்பிட்டுள்ளோம். இந்த வைரஸால் உயிரிழந்த மக்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்போதே இதன் தாக்கம் எவ்வளவு தீவிரமாக இருக்கிறது என்பதைப் பார்க்க முடிகிறது என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory